இந்தியாவில் கோவிட்-19 தொற்றின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்துவருகிறது. வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் வரும் ஏப்ரல் 20ஆம் தேதி முதல் சில தளர்வுகளுடன் ஊரடங்கு கடைப்பிடிக்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்திருந்தார்.
இந்நிலையில், வைரஸ் பரவலின் நிலைமை குறித்து விவாதிக்க 12ஆவது முறையாக மத்திய அமைச்சரவைக் கூட்டம் இன்று மதியம் நடைபெற்றது. இந்தக் கூட்டம் சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தலைமையில் நடைபெற்றது.
இது குறித்து உயர்மட்ட அலுவலர் ஒருவர் கூறுகையில், "சுமார் இரண்டு மணி நேரம் வரை நீடித்த இந்த ஆலோசனைக் கூட்டத்தில் சீனாவிலிருந்து பரவிய இந்த கோவிட்-19 பரவலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டன" என்றார்.