தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

தங்கக் கடத்தல் வழக்கு: கேரள முதலமைச்சரின் முன்னாள் முதன்மை செயலருக்கு காவல் நீட்டிப்பு

தங்கக் கடத்தல் வழக்கு தொடர்பாக சிவசங்கர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை அமலாக்கத் துறை சுமத்தியுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை, சுங்கத் துறை, அமலாக்கத் துறை ஆகியவை தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றன.

Gold smuggling case
Gold smuggling case

By

Published : Nov 11, 2020, 3:47 PM IST

கொச்சி: தங்கக் கடத்தல் வழக்கில் தொடர்பு இருப்பதாக கைது செய்யப்பட்ட கேரள முதலமைச்சரின் முன்னாள் முதன்மை செயலருக்கு மேலும் ஒரு நாள் காவல் நீட்டிப்பு செய்து சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கேரள முதலமைச்சரின் முன்னாள் முதன்மை செயலர் சிவசங்கர், தங்கக் கடத்தல் வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டு அமலாக்கத் துறையின் காவலில் இருந்தார். அவரை மேலும் ஒரு நாள் விசாரணை செய்ய வேண்டும் என அமலாக்கத் துறை சார்பாக சிறப்பு நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டது. இந்த மனுவினை ஏற்று, சிறப்பு நீதிமன்றம் காவல் நீட்டிப்பு செய்து உத்தரவிட்டுள்ளது.

தங்கக் கடத்தல் வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் ஸ்வப்னா சுரேஷுக்கும் சிவசங்கருக்கும் இடையேயான தொடர்பு குறித்து விசாரிக்க, சிறப்பு நீதிமன்றம் கடந்த வாரம் ஆறு நாட்கள் சிவசங்கர் காவலை நீட்டித்து உத்தரவிட்டிருந்தது. அக்டோபர் 28ஆம் தேதி சிவசங்கர் கைது செய்யப்பட்டார்.

தங்கக் கடத்தல் வழக்கு தொடர்பாக சிவசங்கர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை அமலாக்கத் துறை சுமத்தியுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை, சுங்கத் துறை, அமலாக்கத் துறை ஆகியவை தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றன.

ABOUT THE AUTHOR

...view details