திருவனந்தபுரத்திலுள்ள ஐக்கிய அரபு நாடுகளின் தூதரகத்திற்கு கடந்த ஜூலை 5ஆம் தேதி ரகசிய பார்சல் ஒன்று வந்தது. அந்தப் பார்சலை சோதனையிட்ட சுங்கத் துறை அலுவலர்கள் 30 கிலோ கடத்தல் தங்கத்தை பறிமுதல் செய்தனர்.
இந்தக் கடத்தலில் சம்பந்தப்பட்ட தூதரகத்தில் முன்பு பணியாற்றிய பிஆர்ஒ ஸரித், ஸ்வப்னா சுரேஷ், சந்தீப் நாயர் உள்ளிட்டோரை தேசியப் புலனாய்வு முகமை (என்ஐஏ ) அலுவலர்கள் கைது செய்தனர்.
இந்த வழக்கு தற்போது என்ஐஏ கொச்சி சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. இதில் மூன்றாவது குற்றவாளியான பைசல் ஃபரீத் தலைமறைவாக உள்ளார். இதனால் பைசல் ஃபரீத்தின் இருப்பிடத்தை கண்டறியும் வகையில், சர்வதேச காவல் துறையினர் ப்ளூ கார்டன் நோட்டீஸ் வழங்க வேண்டும் என என்ஐஏ கோரிக்கை விடுத்தது.