திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்திற்கு ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து பெருமளவில் தங்கம் கடத்தப்படுவதாக தொடர்ந்து புகார்கள் வந்துள்ளன. இதனையடுத்து சுங்க இலாகா அலுவலர்கள் விமான நிலைய சரக்குப் பிரிவில் மூலமாக மணப்பாடில் உள்ள அந்நாட்டு தூதரக முகவரிக்கு வந்த பார்சல்களை சோதனை செய்தனர்.
அப்போது அதில் 20 கோடி ரூபாய் மதிப்பிலான சுமார் 30 கிலோ தங்கம் இருந்தது கண்டறியப்பட்டது. உடனே சுங்க இலாகா அலுவலர்கள் கடத்தல் தங்கத்தை பறிமுதல் செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
மணப்பாடில் உள்ள அந்நாட்டு தூதரக அலுவலகத்தில் மக்கள் தொடர்பு அலுவலராக பணிபுரிந்துவந்த சரித் குமார் என்பவருக்கு தங்க கடத்தலில் தொடர்பு இருப்பது முதல்கட்ட விசாரணையில் வெளியாகியுள்ளது.
இதனடிப்படையில் கைது செய்யப்பட்ட சரித் குமாரிடன், இந்த கடத்தலுக்கு கேரள அரசின் தகவல் தொழில்நுட்ப துறையில் செயலாக்க மேலாளராக பணியாற்றிய ஸ்வப்னா சுரேஷ் என்பவர் மூளையாக செயல்பட்டதும் கண்டறிப்பட்டுள்ளது.
இவர்கள் இருவரும் ரூ.100 கோடி மதிப்புள்ள தங்கத்தை கடத்தி பல கோடி ரூபாய் ஈட்டியிருக்கலாம் எனவும் அலுவலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இந்தத் தொடர் கடத்தல்களில் சில அரசு அலுவலர்களுக்கு தொடர்பு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.