கேரளாவை உலுக்கி வரும் தங்கக்கடத்தல் விவகாரத்தை என்ஐஏ விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கில் முன்னாள் தூதரக அலுவலர் ஸ்வப்னா சுரேஷ், சந்தீப் நாயர், சரித் குமார் உள்ளிட்ட ஏராளமானோர் கைது செய்யப்பட்டனர்.
இதனிடையே சட்டவிரோதமாக பணபரிமாற்றம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து அமலாக்கத் துறையினரும் ஸ்வப்னா சுரேஷ், சந்தீப் நாயர், சரித் குமார்ஆகியோரிடன் ஆகஸ்ட் 5ஆம் தேதி முதல் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தொடர்ந்து தங்கக்கடத்தல் விவகாரம் தொடர்பாக இடைநீக்கம் செய்யப்பட்ட ஐஏஎஸ் அலுவலர் சிவசங்கரிடம் விசாரணை நடத்தப்பட்டது.
இந்நிலையில் இந்த மூவருக்கும் நீதிமன்றக் காவல் முடிவடைந்ததையடுத்து, இன்று கொச்சி சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது அமலாக்கத்துறை சார்பாக நீதிமன்றத்தில் சில தகவல்கள் தெரிவிக்கப்பட்டது.
அதில், '' ஐஏஎஸ் அலுவலர் சிவசங்கரும், ஸ்வப்னா சுரேஷும் 2017ஆம் ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்திற்கு ஒன்றாக பயணித்ததாகவும், அதேபோல் 2018ஆம் ஆண்டு ஓமன் நாட்டிற்கு சென்று சிவசங்கரை ஸ்வப்னா சுரேஷ் பார்த்துள்ளார். அங்கிருந்து இருவரும் இந்தியாவுக்கு திரும்பியுள்ளனர்.