கோவிட் காரணமாக, பல்வேறு இன்னல்களை கடந்தாண்டில் சந்தித்த பின், கேரளாவின் மிகவும் பிரபலமான சுற்றுலாத் தலங்களில் ஒன்றான மூணாரில் டிசம்பர் இறுதி வாக்கில், வெப்பநிலை பூஜ்ஜியத்திற்குக் கீழே சரியத் தொடங்கியது. குளிர்ந்த காற்று, மூடுபனி மூடிய சூழல்கள் மூணாரை மீண்டும் உயிர்ப்பிக்கத் தொடங்கியது.
நுழைவுச் சீட்டுகளைப் பெற மூணாரின் பல்வேறு இடங்களில் வாகனங்களின் நீண்ட வரிசைகள் காத்திருந்ததைப் பார்த்த உள்ளூர் மக்களின் முகங்களில் புன்னகை மீண்டும் தவழ ஆரம்பித்தன. பசுமையான பின்னணியில் சமூக விலகலைப் பின்பற்றி முகக் கவசங்களை அணிந்து, தம்பதிகள் மகிழ்ச்சியுடன் செல்ஃபிக்களை எடுத்து கொண்டிருந்தனர்.
வெளிநாட்டு விமானங்கள் இன்னும் முழுமையாக இயக்கப்படாததால் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் யாரும் காணப்படவில்லை. "Change of Air" என்றழைக்கப்படும் ஒரு புதிய சுற்றுலா திட்டம் இப்போது அச்சு ஊடகங்கள், மின்னணு ஊடகங்கள், எஃப்எம், டிஜிட்டல் மற்றும் சமூக ஊடகங்களில் பரவலாக ஒளிபரப்பப்பட்டு விளம்பரப்படுத்தப்பட்டதால் சுற்றுலாப் பயணிகளிடையே அதிக வரவேற்பை பெற்றுள்ளது என்று கேரள சுற்றுலா இயக்குநர் பி பாலகிரன் ஐ.ஏ.எஸ். கூறினார்.
ஊரடங்கு காரணமாக, பல மாதங்களாக வீட்டில் அடைபட்டுக் கிடந்த உள்நாட்டு சுற்றுலாப் பயணிகள், இப்போது 'பழிவாங்கும் சுற்றுலா' என்ற பெயரில் புதிய இடங்களுக்கு வருகிறார்கள் என்று அவர் மேலும் கூறினார். சுற்றுலா என்று வரும்போது, கேரளா என்பது அனைத்து இந்தியரின் மனதிலும் மிகவும் பிடித்த ஒன்றாகும்.
'பழிவாங்கும் சுற்றுலாப் பயணிகளின்' வருகையால் சுற்றுலாத்துறை இழந்த சமநிலையை மீண்டும் பெறும். கடந்த ஆண்டு நவம்பர் 1ஆம் தேதி அனைத்து முக்கிய சுற்றுலா தலங்களும் திறக்கப்பட்ட பின்னர் மாநிலம் முழுவதும் வருகை தந்த பயணிகள் எண்ணிக்கையை சுற்றுலாத் துறை இன்னும் கணக்கிடவில்லை என்றாலும், தோராயமான கணக்கீடுகள் உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகையில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியைக் காட்டுகின்றன.
இரட்டிப்பாகியது
உதாரணமாக, இடுக்கியில் உள்ள இரவிக்குளம் தேசிய பூங்கா, செங்குத்தான பாறைகளின் மீதேறி உணவுகளை உண்ணும் பிரபலமான மலை ஆடுகளை காண வருகை தரும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு அக்டோபரில் பூங்கா மீண்டும் திறக்கப்பட்டபோது, ஒரு மாதத்தில் 6104 சுற்றுலா பயணிகள் பூங்காவை பார்வையிட்டனர்.
இந்த எண்ணிக்கை நவம்பரில் 21766 ஆகவும், டிசம்பரில் 43,509 ஆகவும் இரட்டிப்பாகியது. மாவட்ட சுற்றுலா மேம்பாட்டு கவுன்சிலின் கீழ் வரும் இடுக்கியில் உள்ள 9 சுற்றுலா மையங்கள் அக்டோபரில் திறக்கப்பட்ட பின்னர் 1,41,396 சுற்றுலா பயணிகள் வருகை தந்தனர்.