நாடாளுமன்றத்தில் நடந்த விவாதத்தின் போது பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் பிரக்யா சிங் தாகூர், நாதுராம் கோட்சேவை தேசப் பக்தர் என்று புகழ்ந்தார். இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் பிரக்யா சிங் தாகூருக்கு எதிராக மத்தியப் பிரதேச மாநிலம் ராஜ்கார்க் பையோரா பகுதியில் போராட்டம் நடந்தது. அப்போது பிரக்யா சிங் தாகூரின் உருவப் பொம்மை தீயிட்டு கொளுத்தப்பட்டது.
தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர் (எம்.எல்.ஏ) பிரக்யா சிங் தாகூருக்கு கடும் மிரட்டல் விடுத்தார். அப்போது, “நாங்கள் அவரது உருவப் பொம்மையை மட்டும் எரிக்க மாட்டோம். உயிரோடு வைத்து கொளுத்தி விடுவோம்” என்று எச்சரிக்கை விடுத்தார்.
முன்னதாக பிரக்யா சிங் மகாத்மா காந்தியடிகளை அவமதித்து விட்டார் என்று ஆதீர் ரஞ்சன் சௌத்ரி, தயாநிதி மாறன், மாணிக் தாகூர் மற்றும் என்.கே.பிரேமசந்திரன் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் புகார் அளித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரக்யா தாகூரை உயிருடன் எரித்துக் கொல்வோம்: காங்கிரஸ் எம்.எல்.ஏ..! - பிரக்யா சிங் தாகூருக்கு காங்கிரஸ் எம்.எல்.ஏ. மிரட்டல்
போபால்: நாதுராம் கோட்சேவைப் புகழ்ந்த பாஜகவின் பிரக்யா சிங் தாகூரை உயிருடன் எரித்துக் கொல்வோம் என்று காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர் (எம்.எல்.ஏ.) கோவர்தன் தாங்கி கூறியுள்ளார்.

Godse remark: Congress leader threatens to burn alive BJP's Pragya Thakur