தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஜாமீன் கோரி உச்ச நீதிமன்றத்தை நாடிய கோத்ரா குற்றவாளி! - உச்ச நீதிமன்றம்

டெல்லி: 2002ஆம் நடைபெற்ற கோத்ரா கலவரத்தின் குற்றவாளி, தனக்கு மருத்துவ அடிப்படையில் ஜாமீன் வழங்கக் கோரி உச்ச நீதிமன்றத்தை நாடியுள்ளார்.

உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம்

By

Published : May 26, 2020, 6:09 PM IST

குஜராத் மாநிலம் கோத்ராவில் 2002ஆம் நடைபெற்ற கலவரத்தில் ஈடுபட்ட குற்றவாளி கிஷன் கோரணி, தனக்கு மருத்துவ அடிப்படையில் ஜாமீன் வழங்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், உதவி காவல் கண்காணிப்பாளர் பதவிக்கு குறையாத நிலையில் உள்ள அலுவலர் ஒருவர், குற்றவாளியின் உடல்நிலை குறித்த நிலை அறிக்கையை ஒரு வாரத்திற்குள் மின்னஞ்சல் மூலம் தாக்கல் செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தியது. அந்த அறிக்கையை வைத்தே ஜாமீன் வழங்குவது குறித்து முடிவு செய்யப்படும் என்றும் கூறியுள்ளது.

முன்னதாக ஜனவரி மாதம், கோத்ரா கலவரத்திற்குப் பிந்தைய வழக்கில் 15 ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட குற்றாவாளிகளுக்கு, குஜராத்திற்கு வெளியே தங்கி மத்தியப் பிரதேசத்தில் சமூக சேவை செய்ய வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில் உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. இவர்கள் 15 பேர், அனந்த் மாவட்டத்தில் உள்ள ஓட் நகரில் நடந்த படுகொலையில் குற்றம்சாடப்பட்டு ஆயுள் தண்டனை அனுபவித்து வந்தவர்கள். இந்த கலவரத்தில் 23 இஸ்லாமியர்கள் உயிருடன் எரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ஆம்பன் பேரழிவு : பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ நிதி அளித்த அமெரிக்க தொண்டு நிறுவனம்!

ABOUT THE AUTHOR

...view details