கர்நாடகா ஹப்லி மாவட்டம், மண்டூர் பகுதியில் அமைந்துள்ளது நல்லமாதேவி அம்மன் திருக்கோயில். இங்கு தினமும் கணிசமான பக்தர்கள் வந்து அம்மனை வணங்கி செல்வது வழக்கம். இதனையடுத்து, இரண்டு நாட்களுக்கு முன்பு வெள்ளியால் செய்யப்பட்ட கண்கள் நல்லமாதேவியின் சிலைக்கு பொருத்தப்பட்டிருக்கிறது.
திருடுபோன அம்மனின் கண்கள் திரும்ப வந்தது - பக்தி பரவசத்தில் மக்கள்! - கர்நாடகாவில் கண்கள் திருப்பட்ட நிலையில் இருக்கும் சாமி சிலை
ஹப்லி: கர்நாடகாவில் திருடப்பட்ட 'கண்கள்' திரும்பவும் சிலைக்கு வந்து சேர்ந்ததால், மக்கள் அதனை அதிர்ஷ்ட தெய்வம் எனக் கருதி கூட்டம் கூட்டமாக வணங்கி வருவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
பின்னர் அன்றிரவே அக்கண்கள் அடையாளம் தெரியாத நபர்களால் திருடப்பட்டது. அதன்பிறகு கோயிலை பூட்டிவிட்டு அங்கிருந்து சென்ற கோயில் பூசாரி, மறுநாள் காலையில் வந்து பார்க்கும் பொழுது திருடப்பட்ட கண்கள் திரும்பவும் சிலையிலேயே இருந்துள்ளது. இச்செய்தி அப்பகுதி மக்களிடையே பரவியதால், பொதுமக்கள் அதிர்ஷ்ட தெய்வம் எனக் கருதி கூட்டம் கூட்டமாக வந்து நல்லமாதேவியின் சிலையை வணங்கிச் செல்கின்றனர். நல்லமாதேவியைக் காணவரும் பக்தர்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்துள்ளதால் அப்பகுதியில் உள்ள ரயில் நிலையத்திற்கு இடையூறு ஏற்பட்டுள்ளது.