கடந்த சில நாட்களாக மகாராஷ்டிரா மாநிலத்தில் பலத்த மழை பெய்ததைத் தொடர்ந்து, நாசிக் நகரில் உள்ள கோதாவரி நதியின் நீர்மட்டம் அபாய கட்டத்திற்கு மேலே உயர்ந்துள்ளது. கடந்த ஐந்து நாட்களில் மகாராஷ்டிராவின் நீர்ப்பாசனத் துறை, கங்காப்பூர் அணையிலிருந்து கோதாவரி ஆற்றில் வினாடிக்கு ஆயிரம் கன அடி தண்ணீரை வெளியேற்றியது.
இதையடுத்து, நாசிக்கில் தாழ்வான பகுதிகளில் உள்ள பல கட்டடங்கள் நீரில் மூழ்கியுள்ளன. இது தவிர, கோயில்களில் உள்ள பல உயரமான சிலைகளும் அடித்துச் செல்லப்பட்டன. இதனால் நகரின் முக்கிய சந்திப்புகளில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.