தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

விமான டிக்கெட் இவ்வளவுதானா? - கோ ஏர் விமான நிறுவனத்தின் அதிரடி சலுகை! - கோ ஏர் விமான நிறுவனம்

மும்பை: உள்ளூர் விமானப் பயணங்களுக்கான தொடக்க கட்டணம் ரூ.899 என கோ ஏர் விமான நிறுவனம் நிர்ணயித்திருப்பது விமானப் பயணகளிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

GoAir

By

Published : May 25, 2019, 7:51 PM IST

மும்பையை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டுவரும் கோ ஏர் (GoAir) விமான நிறுவனம், பயணிகளுக்கு மெகா மில்லியன் சேல் என்ற புதிய சலுகையை அறிமுகப்படுத்தியுள்ளது. அதில் உள்ளூர் பயணங்களுக்கான முதல் பத்து லட்சம் டிக்கெட்டுகளின் தொடக்க விலை ரூ.899 என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சலுகை ஜூன் 15ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 31ஆம் தேதியோடு நிறையவடையவுள்ளது. இதுகுறித்து அந்திறுவனத்தின் செயல் அதிகாரி பேசுகையில், பெரும்பாலான விமானப் பயணிகள் கட்டண உயர்வுக்கு எதிராக பேசி வரும் நிலையில் இந்தத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது என்றார்.

ஆனால் இந்த டிக்கெட்டுகளை பதிவு செய்வதற்கு நாளை மறுநாள் முதல் (மே 27 முதல் 29 வரை) மூன்று நாட்களுக்கு மட்டுமே அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த பயண டிக்கெட்டுகளைப் பெறுவதற்கான கட்டணத்தை இணையம் வழியாக செலுத்தினால் பல்வேறு கேஷ்பேக் சலுகைகளும் கொடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சலுகை பயணிகளிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details