கரோனா தொற்று காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால், விமான போக்குவரத்து துறை கடுமையான நஷ்டத்தை சந்திக்க வேண்டிய சூழ்நிலை உருவானது. மே 25ஆம் தேதி உள்நாட்டு விமான போக்குவரத்துக்கு மத்திய அரசு அனுமதி வழங்கினாலும், பெரும்பாலான மக்கள் கரோனா அச்சத்தால் பயணம் செய்வதை தவிர்த்து வந்தனர். ஊரடங்கு காலத்தில் ஏற்பட்ட பாதிப்பை சரிசெய்வதற்காகவும், மக்களை கவர்வதற்காகவும் பல்வேறு வகையான புதிய திட்டங்களையும், சலுகைகளையும் விமான போக்குவரத்து நிறுவனம் அறிமுகப்படுத்தியது.
அந்த வகையில், கோ ஏர் என்ற விமான போக்குவரத்து நிறுவனம், புதிய முயற்சியாக கோஃப்ளை பிரைவேட்' என்ற வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய வசதியானது மக்களுக்கு ஒரு பிரைவேட் ஸ்பேஸ் கிடைக்கவேண்டும் என்ற நோக்கத்தில் கொண்டுவரப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.