மறைந்த முதலமைச்சர் மனோகர் பாரிக்கரின் தொகுதியிலுள்ள பர்ரா (Parra) கிராமத்தில்தான் இந்த விதிகள் விதிக்கப்பட்டுள்ளன. இக்கிராமம் அழகிய தென்னஞ்சோலைகளை கொண்டது. வழி நெடுகிலும் தென்னை மரங்கள் எல்லை கற்கள் போன்று வரிசையாக நிற்கும்.
இதைப் பார்க்கும் சுற்றுலாப் பயணிகள், இயக்குநர் ஷங்கர் போன்று பிரமாண்ட படத்தை தங்களின் மனக்கண்ணாலே எடுத்து விடுவார்கள். மேலும் தங்களின் கைகளில் உள்ள கேமரா, செல்போன்கள் என அக்காட்சியை கபளீகரம் செய்துவிடுவார்கள். தென்னிந்திய, பாலிவுட், சர்வதேச சினிமா படங்களின் சூட்டிங் பல இங்கு நடந்துள்ளது.
இந்தப் பகுதியில்தான் தற்போது தூய்மை (Swachhta Tax), புகைப்படம் (Photography Tax) உள்ளிட்ட வரிகள் விதிக்கப்பட்டுள்ளன. கிராம பஞ்சாயத்து இந்த முடிவை எடுத்ததாகவும் அந்த வகையில் ரூ.500 வரை வரியாக விதிக்கப்படும் என்றும் தெரிகிறது.
இது தற்போது விவாத பொருளாகிவிட்டது. இதுதொடர்பாக கருத்து தெரிவித்த உள்ளூர்வாசி ஒருவர், இது முற்றிலும் தவறான ஒன்று. சுற்றுலாப் பயணிகளின் வருகையை பாதிக்கும். மேலும் சில தவறுகளும் நடக்க வாய்ப்புள்ளது என்று அவர் கூறினார்.
இதையும் படிங்க: 'படையப்பா இன்னும் பல சாதனைகளை படையப்பா' - தமிழிசையின் மாஸ் ட்வீட்!