கோவாவில் கடந்த சில நாள்களாக பலத்த மழை பெய்து வருகிறது. பல இடங்களில் வெள்ளம் போல் மழைநீர் சூழ்ந்துள்ளன. இந்நிலையில், நேற்று பெய்த கனமழையின் காரணமாக வடக்கு கோவா பெர்னெமில் பகுதியில் உள்ள சுரங்கப்பாதை சுவரின் ஒரு பகுதி அதிகாலை இடிந்து விழுந்துள்ளது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை. தற்போது கொங்கன் ரயில் நிலையத்தின் மூத்த அலுவலர்களின் ஆலோசனையின் பேரில் பாதை சீரமைக்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
கனமழையால் இடிந்த சுரங்கப்பாதை சுவர்: கோவாவில் ரயில்களின் பாதைகள் மாற்றம் - பெர்னெம்
கோவா: பெர்னெமிலில் உள்ள சுரங்கப்பாதை சுவரின் ஒரு பகுதி கனமழையால் இடிந்து விழுந்த காரணத்தினால், பல ரயில்கள் மாற்று பாதையில் திருப்பிவிடப்பட்டுள்ளன.

tunnel
இந்த திடீர் விபத்தால் எர்ணாகுளம்-ஹஸ்ரத் நிஜாமுதீன் சூப்பர்ஃபாஸ்ட் ஸ்பெஷல் எக்ஸ்பிரஸ், திருவனந்தபுரம் மத்திய லோக்மான்ய திலக் சிறப்பு எக்ஸ்பிரஸ், திருவனந்தபுரம் மத்திய ராஜதானி சிறப்பு எக்ஸ்பிரஸ், ஹஸ்ரத் நிஜாமுதீன் எர்ணாகுளம் சூப்பர்ஃபாஸ்ட் ஸ்பெஷல் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட ரயில்கள் மாற்று பாதையில் திருப்பிவிடப்பட்டுள்ளன.