தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கரோனா வைரஸ்: கோவாவில் தீவிரமடையும் கண்காணிப்பு - கொரோனா வைரஸை முன்னிட்டு கோவா அரசு சிறப்பு பணிக்குழு

கரோனா வைரஸ் வேகமாகப் பரவிவரும் நிலையில், கோவா அரசு இதுகுறித்து வழக்குகளை கண்காணிக்க சிறப்பு பணிக்குழுவை அமைத்துள்ளது.

Goa govt to form special task force due to Coronavirus Alert
Goa govt to form special task force due to Coronavirus Alert

By

Published : Jan 27, 2020, 3:11 PM IST

Updated : Mar 17, 2020, 5:00 PM IST

சுற்றுலா மாநிலமான கோவாவில் கரோனா வைரஸ் குறித்த வழக்குகளை கண்காணிக்க சிறப்பு பணிக்குழுவை அமைக்க கோவா அரசு முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து பேசிய சுகாதார அமைச்சர் விஸ்வாஜித் ரானே இந்தியாவுக்கு வெளியே வைரஸ் பாதிப்புக்குள்ளான பகுதிகளிலிருந்து கோவாவுக்கு வரும் மக்கள் தீவிரமாகக் கண்காணிக்கப்படுவார்கள் என்று தெரிவித்தார்.

மேலும் கோவாவில் கரோனா வைரஸ் தொடர்பான எந்தவொரு வழக்கினையும் கண்காணிக்க ஒரு சிறப்பு பணிக்குழுவை உருவாக்க தான் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளதாகத் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ள அவர், வைரஸ் பாதிப்புக்குள்ளான பகுதிகளிலிருந்து வரும் மக்கள் தீவிர கண்காணிப்புள்ளாக்கப்படுவார்கள் என்றும் தெரிவித்தார்.

விஸ்வாஜித் ரானே ட்வீட்

தற்சமயம் 80 பேரை கரோனா வைரஸ் கொன்றிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க: மோடி சொல்லும் இந்தியாவின் 'டேவிட் பெக்காம்'!

Last Updated : Mar 17, 2020, 5:00 PM IST

ABOUT THE AUTHOR

...view details