கோவா மாநில முதலமைச்சர் பிரமோத் சாவந்த் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பாஜக நிர்வாகிகளை சந்தித்து பனாஜிக்கு திரும்பும் வழியில் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த பெண் ஒருவர் விபத்துக்குள்ளாகியிருப்பதைக் கண்டு தனது வாகனத்தை நிறுத்தியுள்ளார்.
காயமடைந்த பயணிக்கு உதவிய கோவா முதலமைச்சர் - Goa CM provides injured tourist ride to hospital in convoy
பனாஜி: கோவா முதலமைச்சர் பிரமோத் சாவந்த் விபத்தில் காயமடைந்த பெண் ஒருவருக்கு முதலுதவி அளித்து மருத்துவமனையில் அனுமதித்துள்ள காணொலி தற்போது வைரலாகிவருகிறது.
Goa CM provides injured tourist ride to hospital in convoy
மருத்துவம் பயின்ற (Alternative Medicine) பிரமோத், காயமடைந்த பெண்ணிற்கு முதலுதவி அளித்து, விபத்து குறித்த தகவல்களைக் கேட்டறிந்தார். பின்னர், தன்னுடைய பாதுகாப்பு வாகனம் ஒன்றில், மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்தார்.
இந்தச் சம்பவத்தை நேரில் கண்டவர்கள் முதலமைச்சர் பிரமோத் சாவந்த் பெண்ணிற்கு உதவியதை சமூக வலைதளங்களில் காணொலியாக பதிவேற்றியுள்ளனர். இது தற்போது பலராலும் பகிரப்பட்டு வைரலாகிவருகிறது.