உலகையே அச்சுறுத்திவரும் கரோனா வைரசின் தாக்கம் பல்வேறு நாடுகளில் குறையத் தொடங்கியுள்ளது. இருந்தபோதிலும் சில நாடுகளில் கரோனாவின் இரண்டாம் அலை தாக்கத் தொடங்கியுள்ளது.
உலகம் முழுவதும் தற்போது கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஐந்து கோடியே 79 லட்சத்து 15 ஆயிரத்து 599 ஆக அதிகரித்துள்ளது. இதில், நான்கு கோடியே ஒரு லட்சத்து 48 ஆயிரத்து 831 பேர் தொற்றிலிருந்து மீண்டுள்ளனர்.
மேலும், தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பலனின்றி 13 லட்சத்து 77 ஆயிரத்து 826 பேர் உயிரிழந்துள்ளனர்.
கரோனா அதிகளவில் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. அங்கு, இதுவரை ஒரு கோடியே 22 லட்சத்து 74 ஆயிரத்து 726 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், இரண்டு லட்சத்து 60 ஆயிரத்து 283 பேர் கிசிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
அமெரிக்கா முழுவதும் மீண்டும் கரோனா வைரஸ் தொற்றின் பாதிப்பு அதிகரித்துவரும் நிலையில், கரோனா தடுப்பூசியின் இறுதிகட்ட மருத்துவ பரிசோதனைகள் நிறைவடைந்து, தடுப்பூசி விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது, அமெரிக்காவில் நாள் ஒன்றிக்குச் சராசரியாக ஆயிரத்து 300 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழக்கின்றனர்.
கரோனா வைரஸ் நோய்க்கு எதிராக பாதுகாப்பான மற்றும் பயனுள்ள தடுப்பூசியை உருவாக்கி உற்பத்திச் செய்வதற்கான முயற்சிகளுக்கு சவுதி அரேபிய அரசாங்கம் 500 மில்லியனுக்கும் அதிகமான அமெரிக்க டாலர்களை வழங்கியுள்ளது என்று நாட்டின் சுகாதார அமைச்சர் தவ்ஃபிக் அல் ரபியா வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஜி-20 உச்சி மாநாட்டிற்கு முன்னதாகத் தெரிவித்தார்.