தமிழ்நாடு

tamil nadu

By

Published : Nov 5, 2020, 1:24 PM IST

Updated : Nov 5, 2020, 1:47 PM IST

ETV Bharat / bharat

அமெரிக்காவில் 2 லட்சம் பேர் மரணம்: புதிய அதிபருக்கு காத்திருக்கும் 'கரோனா' சவால்!

உலகளவில் கரோனா பாதிப்பு நான்கு கோடியே 84 லட்சத்து 22 ஆயிரத்து 13 ஆக அதிகரித்துள்ளது. தொற்றால் இறந்தோரின் எண்ணிக்கை 12 லட்சத்து 30 ஆயிரத்து 786 ஆகும். அமெரிக்காவில் மட்டும் மொத்தம் இரண்டு லட்சம் பேர் இறந்துள்ளனர்.

Global COVID-19 tracker
Global COVID-19 tracker

ஹைதராபாத்:கரோனா பாதிப்பால் உயிரிழந்தோரின் எண்ணிக்கையில் அமெரிக்கா முதலிடத்தில் இருக்கிறது. இதனைத் தொடர்ந்து, பிரேசில், இந்தியா, மெக்ஸிகோ, பிரிட்டன் முறையே அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.

உலகளவில் கரோனா பாதிப்பு நான்கு கோடியே 84 லட்சத்து 22 ஆயிரத்து 13ஆக அதிகரித்துள்ளது. தொற்றால் இறந்தோரின் எண்ணிக்கை 12 லட்சத்து 30 ஆயிரத்து 786 ஆகும். இதுவரை, மூன்று கோடியே 46 லட்சத்து 71 ஆயிரத்து 485 பேர் குணமடைந்துள்ளனர்.

புதிய அதிபருக்கு காத்திருக்கும் சவால்

உலக வல்லரசுகளில் முதன்மை நாடாகக் கருதப்படும் அமெரிக்கா இந்தக் கரோனா பெருந்தொற்றால் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது.

அங்கு மொத்த பாதிப்பின் எண்ணிக்கை 98 லட்சத்து ஆயிரத்து 355 ஆகும். இரண்டு லட்சத்து 39 ஆயிரத்து 829 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

அமெரிக்காவில் தொடர்ந்து அதிகரித்துவரும் கரோனா பாதிப்பு, அந்நாட்டின் புதிய அதிபராகத் தேர்ந்தெடுக்கப்படுபவருக்கு சவால் மிகுந்ததாக இருக்கும். இந்த மோசமான பாதிப்பை அவர் எவ்வாறு எதிர்கொள்ளப்போகிறார் எனப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

கரோனா பாதிப்பில் இரண்டாவது இடத்தில் இருக்கும் இந்தியாவில் 83 லட்சத்து 63 ஆயிரத்து 412 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், ஒரு லட்சத்து 24 ஆயிரத்து 354 பேர் உயிரிழந்துள்ளனர்.

அமெரிக்காவும், ஐரோப்பாவும்!

அமெரிக்காவில் மட்டும் மொத்தம் இரண்டு லட்சம் பேர் இறந்துள்ளனர். கரோனா பாதிப்பால் உயிரிழந்தோரின் எண்ணிக்கையில் அமெரிக்கா முதலிடத்தில் இருக்கிறது. இதனைத் தொடர்ந்து, பிரேசில், இந்தியா, மெக்ஸிகோ, பிரிட்டன் முறையே அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.

ஐரோப்பிய நாடுகள் பலவற்றில் கரோனா இரண்டாம் அலை உருவாகி பாதிப்புகள் அதிகமாகிக் கொண்டிருக்கின்றன. இதனால் அங்கு மீண்டும் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுவருவதோடு, கட்டுப்பாடுகள் அதிகரித்துள்ளன.

Last Updated : Nov 5, 2020, 1:47 PM IST

ABOUT THE AUTHOR

...view details