சீனாவின் வூஹான் நகரில் கடந்தாண்டு இறுதியில் பரவத் தொடங்கியது, கரோனா வைரஸ். இந்த வைரஸ் சீனாவில் குறைந்திருந்தாலும் மற்ற நாடுகளில் வேகமாகப் பரவி வருகிறது. கரோனாவால் கடந்த ஜனவரி மாதத்திலிருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்து வருகின்றனர்.
இந்நிலையில், உலகம் முழுவதும் இதுவரை இரண்டு கோடியே 22 லட்சத்து 94 ஆயிரத்து 596-க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.இதன்மூலம், உலகளவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7 லட்சத்து 83 ஆயிரத்து 430 பேர் ஆக அதிகரித்துள்ளது. அதேசமயம் இத்தொற்றால் இதுவரை ஒரு கோடியே 50 லட்சத்து 37 ஆயிரத்து 176 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
கரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக அமெரிக்கா உள்ளது. இதுவரை 1லட்சத்து 70ஆயிரம் பேர் கரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர். 56 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.இங்குள்ள 19 மாகாணங்களில் கரோனா உயிரிழப்பு விகிதம் அதிகமாக உள்ளது. டெக்சாஸ், புளோரிடா, கலிபோர்னியா போன்ற மாகாணங்களில் கரோனா உயிரிழப்பு அதிகமாக உள்ளது.