கரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.உலகெங்கிலும் கரோனா வைரஸ் தொற்றால் இதுவரை 1 கோடியே 98 லட்சத்து 7 ஆயிரத்து 605 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 7 லட்சத்து 29 ஆயிரத்து 613 பேர் உயிரிழந்துள்னர்.இதுவரை 1 கோடியே 27 லட்சத்து 24 ஆயிரத்து 299 க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர்.
அமெரிக்காவில் கென்டக்கி நகரில் இன்று புதிதாக 801 பேர் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.இதில் 5 வயது குழந்தை உட்பட 29 குழந்தைகள் அடங்குவர்.
இதுகுறித்து, கென்டக்கி ஆளுநர் ஆண்டி பெஷியர் கூறுகையில், புதிதாக கரோனா வைரஸ் தொற்றால் 34 ஆயிரத்து 578 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 772 பேர் உயிரிழந்துள்ளனர் எனக் கூறினார்.
பிரேசிலில் தினமும் ஆயிரம் பேர் உயிரிழந்து வருகின்றனர். அந்த வகையில் இன்று கரோனா வைரஸ் தொற்றால் 905 பேர் உயிரிந்த நிலையில் தற்போது நாட்டில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டியுள்ளது.
அமெரிக்காவில் உயிரிழப்பு ஒரு லட்சத்தை எட்டியுள்ள நிலையில் தற்போது இரண்டாவதாக பிரேசிலில் உயிரிழப்பு ஒரு லட்சத்தை எட்டியது குறிப்பிடத்தக்கது.