உலகெங்கிலும் கரோனா வைரஸ் (தீநுண்மி) தொற்று ஒரு கோடியை இரண்டு லட்சத்து 48 ஆயிரத்து 232 கோடியை எட்டியுள்ளது. ஐந்து லட்சத்து நான்காயிரத்து 462 பேர் இத்தீநுண்மியால் இறந்துள்ளனர். 55 லட்சத்து 56 ஆயிரத்து 439 பேர் குணமடைந்துள்ளனர்.
கரோனாவைக் கட்டுப்படுத்த மருந்து எதுவும் கண்டுபிடிக்காததால் இந்தத் தீநுண்மி பரவல் இரண்டு மடங்கு அதிகரிக்கக்கூடும் என உலக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தென்கொரியாவில் பிப்ரவரி பிற்பகுதியிலும் மார்ச் மாத தொடக்கத்திலும் ஒரு நாளைக்கு நூற்றுக்கணக்கான கரோனா பதிவாகிவந்தன. ஆனால் தற்போது 40 முதல் 42 மட்டுமே பதிவாகிவருகின்றன.