கரோனா தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கையில் ஐந்தாம் இடத்தை பிடித்த பிரான்ஸ்!
ஹைதராபாத்: உலகெங்கிலும் கரோனா வைரஸ் தொற்றால் 65 லட்சத்து 67 ஆயிரத்ததுக்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 3 லட்சத்து 87 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர்.
பிரான்ஸ் நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் கரோனா தொற்றுக்கு 44 பேர் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து, அங்கு உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 29 ஆயிரத்து 65 ஆக உயர்ந்துள்ளதாக, அந்நாட்டு சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. அமெரிக்கா, பிரிட்டன், இத்தாலி, பிரேசிலுக்கு அடுத்தபடியாக கரோனா தொற்று காரணமாக அதிக உயிரிழப்பு ஏற்பட்ட ஐந்தாவது நாடாக பிரான்ஸ் உள்ளது.
கரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்ட 29 ஆயிரத்து 65 பேரில், 18 ஆயிரத்து 715 பேர் மருத்துவமனைகளில் உள்ளனர். பிரான்ஸில் சரிந்த பொருளாதாரத்தை மீட்கும் முயற்சியாக, ஜூன் 2ஆம் தேதி முதல் ஊரடங்கை அந்நாட்டு அரசு தளர்த்தியுள்ளது. இதனை அடுத்து கஃபேக்கள், பார்கள், உணவகங்கள் உள்ளிட்ட வணிகங்களை மீண்டும் தொடங்கவும், மக்கள் தடையின்றி சுதந்திரமாக செல்லவும் அனுமதித்துள்ளது.
வெளியே வரும் மக்கள் தகுந்த இடைவெளி கடைப்பிடித்தும் முகக் கவசங்கள், கையுறைகளை அணிந்து வெளியே வரவேண்டும் என அரசு கூறியுள்ளது. இதற்கிடையில், இந்தாண்டு ஜூலை 14 ஆம் தேதி பாஸ்டில் தினத்தைக் கொண்டாடுவதற்காக பாரிஸில் உள்ள சாம்ப்ஸ் எலிசீஸின் புகழ்பெற்ற அவென்யூவில், பிரான்ஸ் தனது பாரம்பரிய ராணுவ அணிவகுப்பை ரத்து செய்துள்ளது.
சில விதிவிலக்கான சூழ்நிலை மற்றும் COVID-19 தொற்றுநோய் காரணமாக, இந்த அணிவகுப்பில் கலந்து கொள்ளவில்லை என, பிரான்ஸ் ஜனாதிபதி கூறினார். இப்போது கரோனா வைரஸ் பெரும்பாலான மக்களுக்கு லேசான அல்லது மிதமான அறிகுறிகளை ஏற்படுத்துகிறது. சிலருக்கு, குறிப்பாக வயதானவர்கள் மற்றும் உடல்நலப் பிரச்சினைகள் உள்ளவர்களுக்கு, இது மிகவும் கடுமையான நோயாகவும் அல்லது மரணத்தையும் ஏற்படுத்துகிறது.