நான்காவது சர்வதேச ஆயுர்வேத விழா வரும் மார்ச் 12 முதல் 19ஆம் தேதிவரை இணைய வாயிலாக நடைபெறும் என மத்திய அமைச்சர் முரளிதரன் தெரிவித்துள்ளார். இது குறித்து அமைச்சர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், இந்த விழாவில் மொத்தம் 12 கருத்தரங்குகள் ஐந்து இடங்களில் நடைபெறும். கோவிட்-19க்கு பின் நடைபெறும் இந்த விழாவில், ஆயுர்வேதம் மூலம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது எப்படி என்ற அடிப்படையை விவாதங்கள் நடைபெறும்.
மார்ச் மாதத்தில் சர்வதேச ஆயுர்வேத விழா: அமைச்சர் முரளிதரன் - மத்திய அமைச்சர் முரளீதரன்
சர்வதேச ஆயுர்வேத விழா வரும் மார்ச் 12 முதல் 19ஆம் தேதிவரை நடைபெறும் என மத்திய அமைச்சர் முரளிதரன் தெரிவித்துள்ளார்.
V Muraleedharan
கடந்தாண்டு மே மாதத்தில் இந்த விழாவானது கேரள மாநிலம் அங்கமாலேவில் நடைபெறவிருந்தது. கோவிட்-19 காரணமாக இந்த நிகழ்வு ஒத்திவைக்கப்பட்ட நிலையில், இந்தாண்டு இணையம் மூலம் நடைபெறவுள்ளது. இந்த விழாவில் பிக்கி (Federation of Indian Chambers of Commerce & Industry) அமைப்பும் முக்கிய பங்குதாரராக உள்ளது.
இதையும் படிங்க:கோவிட்-19 தடுப்பூசியில் அரசியலை கலக்க வேண்டாம் - மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங்