ஜார்க்கண்ட் மாநிலம் தும்கா மாவட்டத்தில் உள்ள விமான நிலையத்தில், விமான பயிற்சியில் ஈடுபட்டிருந்த விமானி ஜே.பி. சிங், விமான பொறியாளர் தர்மேந்திரா ஆகியோர் வானில் பறந்து கொண்டிருந்தபோது விமானத்தின் இறகு பழுதடைந்து விபத்துக்குள்ளானது.
விபத்தில் சிக்கிய இருவரையும் மீட்ட அலுவலர்கள், சிகிச்சைக்காக தும்கா சதர் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பொறியாளர் தர்மேந்திரா உயிரிழந்தார்.