ஆர் எஸ் எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பகவத், நாட்டின் மக்கள்தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்தும் புதிய திட்டம் குறித்து யோசனை கூறியதையடுத்து, உத்தரபிரதேச மாநிலத்தின் ஷியா வக்பு வாரியத் தலைவர் வாசிம் ரிஸ்வி இதுகுறித்தான தனது கருத்தினை பகிர்ந்தார்.
அதாவது விலங்குகளைப்போல் மக்கள் குழந்தைகளைப் பெற்றுக்கொள்வது நாட்டிற்கு தீங்கானது என்று வாசிம் ரிஸ்வி கூறினார். சிலர் குழந்தை பெற்றுக்கொள்வது இயற்கை என்றும் அதில் யாரும் தலையிடக்கூடாது என்று நினைக்கிறார்கள் என்று கூறிய வாசிம் ரிஸ்வி, நாட்டின் மக்கள்தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில் அரசு புதிய சட்டம் ஒன்றை இயற்றவேண்டும் என தெரிவித்தார்.