காதலுக்கு கண் இல்லை என்று சொல்வது போல் காதலுக்கு தூரமும் இல்லை என்பதை ஆந்திராவில் ஒரு காதல் ஜோடி நிரூபித்துள்ளனர். ஊரடங்கு உத்தரவால் காதலர்கள் நேரில் சந்தித்துப் பேசுவதே தற்போது கடினமானதாக மாறிவிட்டது. அதையும் பொருட்படுத்தாமல் தனது காதலனை கரம்பிடித்தே ஆக வேண்டும் என்ற வைராக்கியத்தில் ஒரு பெண் வந்துள்ளது அனைவருக்கும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
ஆந்திரா மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர், சுமார் 60 கி.மீ நடை பயணம் செய்து தனது காதலன் சாய் புன்னையாவின் ஊருக்குச் சென்றுள்ளார். பின்னர், அவர்கள் இருவரும் மிகழ்ச்சியுடன் திருமணம் செய்துகொண்டுள்ளனர்.