தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கட்டணம் செலுத்தவில்லை: வெளியேற்றப்பட்ட மாணவிகள் - ஆந்திர பிரதேசம்

அமராவதி: ஆந்திராவில் தனியார் பள்ளி விதித்த அபராதத்தை செலுத்த தவறிய இரண்டு மாணவிகளை வகுப்பறைக்கு வெளியே பள்ளி நிர்வாகம் நிறுத்திய சம்பவம் பெற்றோர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

andra

By

Published : Aug 8, 2019, 4:09 PM IST


ஆந்திர பிரதேச மாநிலம், கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள சின்டால்பாடு என்ற கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ஏடுகொண்டலு. இவரின் இரண்டு மகள்களும் அப்பகுதியில் இருக்கும் தனியார் பள்ளி ஒன்றில் படித்துவருகிறனர்.

இந்நிலையில், கடந்த கல்வியாண்டில் (2018-19) தன் மகள்களின் கல்விக் கட்டணமான 38 ஆயிரம் ரூபாயை அவர் பள்ளியில் கட்டியுள்ளார்.

ஆனால், கட்டணத்தை உரிய நேரத்தில் செலுத்தவில்லை எனக் கூறி ரூ.300 அபராதமாக செலுத்த வேண்டும் என ஏடுகொண்டலுவை அப்பள்ளி நிர்வாகம் வலியுறுத்தியது. ஆனால், அந்த அபராதத்தை அவர் கட்ட தவறியதாக தெரிகிறது.

இதன்காரணமாக, அவரின் இரண்டு மகள்களையும் வகுப்புக்கு வெளியே நிறுத்தி பள்ளி நிர்வாகம் அவமதித்ததாகக் கூறப்படுகிறது. இதனையறிந்து கடும்கோபமடைந்த ஏடுகொண்டலு மறுநாள் பள்ளி நிர்வாகத்திடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

பள்ளி நிர்வாகத்திடம் முறையிடும் மாணவிகளின் தந்தை

இந்த சம்பவம் பெற்றோர்கள் மத்தியில் தொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அரசாங்கத்தின் அலட்சியத்தால் தனியார் பள்ளிகளில் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறிவருவதாக அவர்கள் குற்றம்சாட்டினர்.

ABOUT THE AUTHOR

...view details