தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jul 12, 2020, 12:23 PM IST

Updated : Jul 12, 2020, 12:38 PM IST

ETV Bharat / bharat

'மாணவிகளுக்குப் பட்டப்படிப்பு முடித்தவுடன் பாஸ்போர்ட் வழங்கப்படும்' - ஹரியானா முதலமைச்சர்!

சண்டிகர் (ஹரியானா): மாணவிகளுக்குப் பட்டப்படிப்பு முடித்தவுடன் பாஸ்போர்ட் வழங்கப்படும் என்றும், முழு செயல்முறையும் கல்லூரியில் முடிக்கப்படும் என்றும் ஹரியானா முதலமைச்சர் மனோகர் லால் கட்டார் அறிவித்தார்.

girl-students-in-haryana-to-get-passport-with-graduation-degree-cm-manohar-lal-khattar
girl-students-in-haryana-to-get-passport-with-graduation-degree-cm-manohar-lal-khattar

அனைத்து மாணவிகளும் தங்கள் பட்டப்படிப்பு பட்டத்துடன் தங்கள் கல்வி நிறுவனங்களிலிருந்து பாஸ்போர்ட்டைப் பெற வேண்டும் என்றும், அதற்கான முழு செயல்முறையும் கல்லூரியில் முடித்துத் தரப்படும் என ஹரியானா முதலமைச்சர் மனோகர் லால் கட்டார் அறிவித்தார்.

இதையடுத்து, கர்னாலில் 100 மாணவர்களுக்குப் போக்குவரத்து விதிகள் குறித்து, விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், கல்வி கற்றவர்களின் ஓட்டுநர் உரிமங்களுக்கு இலவச ஹெல்மெட் வழங்கப்படும் என்றும் அவர் கூறினார்.

பின்னர், முதலமைச்சர் கட்டார் சில மாணவர்களுக்குத் தலைக்கவசம் வழங்கி "இதுபோன்ற ஒரு திட்டம் அரசியல் விஷயத்திலிருந்து வேறுபட்டது, அது நீண்ட கால முடிவுகளைக் கொண்டிருக்கும்.

ஹெல்மெட் அணிவதால் விபத்துக்களில் இறப்பு எண்ணிக்கை குறையும். நாட்டில் தினமும் சுமார் 1,300 விபத்துக்கள் நடக்கின்றன. தலைக்கவசம் இல்லாமல் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் காயங்களுக்கு ஆளாகின்றனர். ஹரியானாவில் தினமும் சுமார் 13 பேர் விபத்துக்களில் இறக்கின்றனர்.

ஒருவர் தலைக்கவசம் அணிந்த வாகனத்தை ஓட்டினால், விபத்தில் உயிர் பிழைக்க 80 விழுக்காடு வாய்ப்பு இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன" எனக் கூறினார்.

Last Updated : Jul 12, 2020, 12:38 PM IST

ABOUT THE AUTHOR

...view details