தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

டிக்டாக் வீடியோ எடுக்க பஸ்ஸை நிறுத்தி நடனமாடிய பெண்! #ViralVideo - டிக்டாக் வீடியோ எடுக்க பஸ்ஸை நிறுத்தி நடனமாடிய பெண்

புனே: டிக்டாக்கில் வீடியோ பதிவிடுவதற்காக பெண் ஒருவர் பேருந்தை நிறுத்தி நடனமாடிய காணொலி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Girl stops bus on road, records Tik Tok video

By

Published : Oct 3, 2019, 8:54 PM IST

இன்றைய இளம் தலைமுறையினர் சமூக வலைத்தளங்களின் மேலுள்ள மோகத்தால் தான் செய்வதறியாது செய்து, பல விமர்சனங்களில் சிக்கிக் கொள்கின்றனர்.

அந்தவகையில், மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு பயணிகள் மின்சாரப் பேருந்தை ஒரு பெண் நிறுத்தி, நடனமாடிக்கொண்டே டிக்டாக் வீடியோ எடுத்துள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வைரலாகி வருகிறது.

டிக்டாக் வீடியோ எடுக்க பஸ்ஸை நிறுத்தி நடனமாடிய பெண்

இந்தச்சம்பவம் குறித்து பேசிய புனே காவல் துறையினர், பொது இடங்களில் மக்களுக்கும் போக்குவரத்திற்கும் இடையூறாக இருந்த அடையாளம் தெரியாத அந்த பெண்ணின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்துள்ளனர்.

இதையும் படிக்க:டிக்டாக்கில் பாடல் பாடி போலீசாருக்கு சவால்: 6 பேர் கைது

ABOUT THE AUTHOR

...view details