தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஊரடங்கால் தள்ளிப்போன திருமணம்: பெண் தற்கொலை! - திருமணம் தள்ளிப்போனதால் தற்கொலை

அமராவதி: ஊரடங்கால் திருமணம் தள்ளிப்போனதால் விரக்தி அடைந்த பெண் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

GIRL HANGS TO LOOM WEAVE AS MARRIAGE WAS POSTPONED
GIRL HANGS TO LOOM WEAVE AS MARRIAGE WAS POSTPONED

By

Published : Apr 18, 2020, 4:46 PM IST

ஆந்திர மாநிலம் அனந்த்பூர் மாவட்டம், தர்மாவரம் பகுதியைச் சேர்ந்த பெண் ஹேமாவதி (25). இவருக்கு கொத்தப்பேட்டை பகுதியைச் சேர்ந்த நபருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது.

ஹேமாவதியின் தந்தை இறந்த நிலையில், இவரது தாயார் கைத்தறி மூலம் நெசவுசெய்து குடும்பத்தை காப்பாற்றிவந்தார்.

திருமணம் தள்ளிப்போனதால் தற்கொலை செய்துகொண்ட பெண்

இந்நிலையில், கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதம் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு, பல்வேறு தொழில்கள் முடக்கப்பட்டுள்ளன.

இதன்காரணமாக, ஹேமாவதியின் தாயார் வேலையிழந்ததால் திருமணத்திற்குத் தேவையான பணத்தினை திரட்ட முடியாமல்போனதால் திருமணத்தை தள்ளிவைக்குமாறு மாப்பிள்ளை வீட்டாரிடம் கூறியுள்ளார்.

இதையறிந்த ஹேமாவதி கரோனாவால் தனது திருமணம் தள்ளிப்போனதை எண்ணி விரக்தி அடைந்து தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இது குறித்து, காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

இதையும் படிங்க:கரோனா வார்டில் தனிமைப்படுத்தப்பட்ட நபர் தற்கொலை

ABOUT THE AUTHOR

...view details