டெல்லி துவார்காவில் உள்ள ராம் லீலா மைதானத்தில் தசரா விழா கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. அந்த விழாவிற்கு சிறப்பு விருந்தினராக பிரதமர் மோடி வருகை புரிந்திருந்தார். அப்போது ரேனுகா என்ற பெண் மோடியை ஓவியமாக வரைந்திருந்தார். அந்த ஓவியத்தை மோடிக்கு விழாக்குழுவினர் பரிசளித்தனர். முதலில் மோடிக்கு ரேனுகா வரைந்த ஓவியம் என்று தெரியாதிருந்த நிலையில், பின்னர் ரேனுகாவை மேடைக்கு அழைத்து அவர் ஓவியத்தை கொடுக்க மோடி அதனை ரேனுகாவிடமிருந்து பெற்றுக் கொண்டார்.
மோடிக்கு ஓவியத்தை பரிசளித்த பெண்! - மோடிக்கு ஓவியத்தை பரிசளித்த பெண்
டெல்லி: தசரா விழாவில் கலந்துகொள்ள வந்த பிரதமர் மோடிக்கு ரேனுகா என்ற பெண், அவர் வரைந்த ஓவியத்தை பரிசாக அளித்துள்ளார்.
painting to Modi
இது குறித்து ரேனுகா கூறியதாவது, "என்னை மோடி பாராட்டினார். எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இத்தருணத்தை நான் என்றும் மறக்க மாட்டேன்" என்றார்.
இதையும் படிங்க: 15 ஆயிரம் அடி உயரத்தில் பறந்த 'தூய்மை இந்தியா'! - அசத்திய விங் கமாண்டர்