ஒடிசாவில் உள்ள பூரியில் முன்னாள் காவலரும் அவரின் நண்பர்களும் சேர்ந்து இளம் பெண் ஒருவரை கூட்டு பாலியல் வன்புணர்வு செய்தனர். இதனைத் தொடர்ந்து, அவர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். பேருந்துக்காக நிமபாராவில் தான் நின்று கொண்டிருந்ததாகவும் அப்போது காவலரும் அவரின் நண்பர்களும் வந்து தன்னை வீட்டிற்கு சென்று விடுவதாக நாடகமாடி பூரியில் உள்ள அவர்களின் வீட்டிற்கு கொண்டு சென்று கூட்டு பாலியல் வன்புணர்வு செய்ததாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
ஒடிசாவில் கூட்டு பாலியல் வன்முறை: முன்னாள் காவலர் செய்த கொடூரம்! - Nimapara bus terminal
புவனேஷ்வர்: ஒடிசா மாநிலத்தில் முன்னாள் காவலரும் அவரின் நண்பர்களும் சேர்ந்து இளம்பெண் ஒருவரை கூட்டு பாலியல் வன்புணர்வு செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
RAPE
பாதிக்கப்பட்ட பெண் 18 வயதுக்கு கீழ் உள்ளதால் போக்சோ சட்டம் அவர்களின் மீது பாய்ந்துள்ளது. 20 நாட்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, மாநிலத்தின் முதலமைச்சரின் வீட்டிற்கு முன்பு காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.