உத்தரப் பிரதேசத்தில் தந்தையும் மாமாவும் நாட்டுத்துப்பாக்கியால் பெற்ற தாயையும், உடன்பிறப்புகளையும்சுடச் சொன்னதையடுத்து 16 வயது சிறுமி தற்கொலை செய்துகொண்டுள்ளார். இவருடைய சடலம் ஏப்ரல் 16ஆம் தேதி அவருடைய அறையிலிந்து மீட்கப்பட்டது.
தற்கொலை செய்துகொண்ட சிறுமி தற்கொலைக்கு முன்பு நான்கு பக்க கடிதத்தை எழுதியுள்ளார். அதில், "நான் காவல் துறை அலுவலராக விரும்பினேன்.
ஆனால், தந்தையும் மாமாவும் என்னை உடல், மன ரீதியாகத் துன்புறுத்தி எனது தாயை நாட்டுத்துப்பாக்கியால் சுடக்கூறியதால் நான் தற்கொலை செய்துகொள்கிறேன்.
எனது தந்தை என்னுடைய அம்மாவைத் திருமணம் செய்துகொள்வதற்கு முன்பு அவருடைய முதல் மனைவியையும் நான்கு குழந்தைகளையும் கொலைசெய்துள்ளார். இந்தக் குற்றச் சம்பவத்தில் எனது மாமாவும் சிறை தண்டனை அனுபவித்துள்ளார்.