நடிகர், எழுத்தாளர், கவிஞர், இயக்குநர் என பன்முகத் திறமையோடு விளங்கியவர் கிரிஷ் கர்நாட் (81). இவர் கடந்த சில தினங்களாக உடல் நிலை சரியில்லாமல் அவதிப்பட்டுவந்த நிலையில், இன்று காலை பெங்களூருவில் உள்ள தனது வீட்டில் காலமானார்.
'கிரிஷ் கர்நாட் உடலுக்கு அரசு மரியாதை' - குமாரசாமி அறிவிப்பு! - girish karnad honoured by karnataka state government
பெங்களூரு: 'கிரிஷ் கர்நாட் உடலுக்கு முழு அரசு மரியாதை வழங்கப்படும்' என்று, கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி தெரிவித்துள்ளார்.
karnataka
இவரது மறைவுக்கு பிரதமர் மோடி, கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி, டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்ட தலைவர்கள் தங்களின் இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், கிரிஷ் கர்நாட்டின் உடல் முழு அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படும் என்றும், மூன்று நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என்றும் கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி அறிவித்துள்ளார்.
Last Updated : Jun 10, 2019, 12:19 PM IST