நாடக எழுத்தாளர், கவிஞர், இயக்குநர், விமர்சகர், மொழிபெயர்ப்பாளர், எழுத்தாளர், நடிகர் என பன்முகத் தன்மை கொண்டு விளங்கியவர் கிரிஷ் கர்நாட் (81). இந்நிலையில், கடந்த சில நாட்களாகவே உடல் நிலை சரியில்லாமல் இருந்துவந்த இவர், இன்று காலை உடல் உறுப்புகள் செயலிழந்த காரணத்தால் பெங்களூருவில் உள்ள அவரது வீட்டில் காலமானார்.
கிரிஷ் கர்நாட் மறைவுக்கு பிரதமர் இரங்கல்! - கிரிஷ் கர்நாட்
டெல்லி: பிரபல நடிகரும், எழுத்தாளருமான கிரிஷ் கர்நாட் மறைவுக்கு பிரதமர் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் இரங்கல் தெரிவித்துவருகின்றனர்.
girish karnad
இதையடுத்து, கிரிஷ் கர்நாடின் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்தார். மேலும், கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி, டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், காங்கிரஸ் மூத்தத் தலைவர் சசி தரூர் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
Last Updated : Jun 10, 2019, 12:07 PM IST