மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் ஈடிவி பாரத்துக்கு அளித்த பேட்டியில், "மக்களவைத் தேர்தலுக்குப் பிந்தய கருத்துக்கணிப்புகள் எதிர்க்கட்சியினை கதிகலங்கச் செய்துள்ளது. தற்போது அனைத்து எதிர்க்கட்சியினரும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை குறைக் கூறுவது அதிகரித்துள்ளது" என்று தெரிவித்தார்.
மம்தாவை சர்வாதிகாரியோடு ஒப்பிட்ட கிரிராஜ் சிங் - Kim Jong Un
டெல்லி: மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியை, வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னுடன் ஒப்பிட்டு, மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் பேசியுள்ளார்.
giriraj
மேலும், "ஏழை எளிய மக்களைத் தேடிச் சென்று சந்திக்கும் ஒரே அரசியல் தலைவர் பிரதமர் மோடிதான். இதனால் மோடி மட்டுமே இந்தத் தேர்தலில் போட்டியிடுகிறார்" என்றும் அவர் பெருமிதமாகக் கூறினார்.
"வரும் ஆட்சியில் ஆளுங்கட்சியும் நாங்கள்தான், எதிர்க்கட்சியும் நாங்கள்தான். ராமாயணத்தில் வரும் ராவணனைப்போல மம்தா பானர்ஜி அகங்காரத்துடன் செயல்பட்டு வருகிறார். வடகொரிய சர்வாதிகாரி கிம் ஜாங் உன் போன்று மேற்கு வங்கத்தை ஆட்சி செய்து வருகிறார்" என்று மம்தாவை கடுமையாக சாடினார்.
Last Updated : May 21, 2019, 7:48 PM IST