தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jan 24, 2020, 5:01 PM IST

ETV Bharat / bharat

மீனவர் வலையில் சிக்கிய 15 அடி நீளமுடைய ராட்சத சுறா

புதுச்சேரி: மீனவர் வலையில் சிக்கிய 15 அடி நீளம் உடைய ராட்சத சுறாவை பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்த்து சென்றனர்.

மீனவர் வலையில் சிக்கிய 15 அடி நீளம் உடைய ராட்சத சுறா
மீனவர் வலையில் சிக்கிய 15 அடி நீளம் உடைய ராட்சத சுறா

புதுச்சேரி வீராம்பட்டினம் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் தங்களது விசைப்படகில் இன்று அதிகாலையில் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். அப்போது நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது பரசுராமன் என்ற மீனவரது வலையில் பெரிய மீன் ஒன்று சிக்கியது. அதனை இழுத்தபோது சுறா மீன் என தெரிந்தது.

இதனை அடுத்து சுறா மீனை படகில் ஏற்றி புதுச்சேரி தேங்காய் திட்டு துறைமுகம் பகுதியில் மீனவர்கள் இறக்கினர். பின்னர் மீன்வளத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே சம்பவ இடத்திற்கு வந்த மீன்வளத் துறை அலுவலர்கள் சுறாவை ஆய்வு செய்தனர். அதில் சுறாவின் பெயர் அம்மன சுறா எனவும் அது உயிரிழந்துவிட்டதாகவும், சுமார் 15 அடி நீளமும், இரண்டரை டன் எடையும் உள்ளது எனவும் தெரிவித்தனர்.

மீனவர் வலையில் சிக்கிய 15 அடி நீளம் உடைய ராட்சத சுறா

மேலும், இந்த சுறாவால் கடலில் மீனவர்களுக்கு ஆபத்து இல்லை என்றும் கூறினர். இருப்பினும், சுறாவை பிடித்து வந்த வலை கிழிந்ததால் மீனவர் கவலையடைந்தார். இதற்கிடையே தகவல் அறிந்த பொதுமக்கள் ராட்சத சுறா மீனை பார்ப்பதற்கு திரண்டு வந்தனர். இதனால் அப்பகுதியில் மக்கள் கூட்டம் அலைமோதியது.

இதையும் படிங்க:விமானத்தில் சுறா மீன்களின் வால், செதில் கடத்தியவர் கைது!

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details