தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பொது இடங்களில் எச்சில் துப்பினால் அபராதம்! - தெலங்கானாவில் அசத்தல் திட்டம் - பொது இடங்களில் எச்சில் உமிழ்ந்தால்

தெலங்கானா: சாலையிலும், மக்கள் கூடும் பொது இடங்களிலும் எச்சில் துப்பினால், ஹைதராபாத் மாநகர சுகாதார அலுவலர்கள், அதே இடத்தில் அவர்களுக்கு அபராதம் விதித்து வரும் சம்பவம் பொதுமக்களிடத்தில் நல்ல வரவேற்பைப் பெற்றுவருகிறது.

GHMC fines for spitting on roads

By

Published : Jul 3, 2019, 7:21 PM IST

’சாலைகளில் எங்குத் துப்புகிறீர்கள்? ஆனால் அபராதம் செலுத்தத் தயாராக இருங்கள்!’ இது தான் தற்போது ஹைதராபாத் பெருநகர சுகாதார அலுவலர்கள் பொது இடங்களில் கூறிவரும் வாசகம். ஏனெனில் கையில் ரசீதுடன், பொது வெளியில் எச்சில் துப்புவது, சுகாதாரக் கேடு எனக் கூறியிருக்கும் மாநகராட்சி, அப்படிச் செய்பவர்களுக்கு, அதே இடத்தில் வைத்து அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவித்திருந்தது.

இந்நிலையில், இன்று ஆர்.டி.சி ஓட்டுநருக்கு ஒருவர், சாலையில் துப்பியதற்காக ரூ 100 அபராதம் விதித்து அதிரடி காட்டியது. குஷைகுடா டிப்போவைச் சேர்ந்த ”ஏபி 28 இசட் 3676” ஆர்.டி.சி பேருந்து ஓட்டுநர் ஜகதீஷ், காலையில் தொழிலாளர்கள் சாலையை சுத்தம் செய்த பிறகு, அதில் எச்சில் துப்பியுள்ளார். இதைக் கவனித்த அலுவலர்கள் அதே இடத்தில் வைத்து, ஜகதீசுக்கு அபராதம் விதித்திருக்கின்றனர். இதுபோன்ற செயல்களில் யாராவது ஈடுபட்டால், அவர்களுக்குக் கண்டிப்பாக அபராதம் விதிக்கப்படும் என அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details