தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

'சமூகநீதித் துறை அமைச்சருக்கு எதிராக அவசர தீர்மானம் கொண்டுவரப்படும்' - காங்கிரஸ் - டெல்லி இடஒதுக்கீடு சமூக நீதி அமைச்சர் தாவர்சந்த் கெலாட்

டெல்லி: இடஒதுக்கீடு விவகாரத்தில் மத்திய சமூகநீதித் துறை அமைச்சர் தாவர்சந்த் கெலாட் நாடாளுமன்றத்தை ஏமாற்றியதாகக் குற்றம்சாட்டியுள்ள காங்கிரஸ் கட்சி, அவருக்கு எதிராக அவசர தீர்மானம் கொண்டுவரப்படும் எனவும் தெரிவித்துள்ளது.

Thawar Chand Gehlot, தாவர்சந்த் கெலாட்
Thawar Chand Gehlot

By

Published : Feb 11, 2020, 9:45 AM IST

Updated : Feb 11, 2020, 3:13 PM IST

இதுதொடர்பாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால் கூறுகையில், "எஸ்சி, எஸ்டி, மற்ற பிற்படுத்தப்பட்ட சமூகத்தினரின் இடஒதுக்கீட்டைத் துண்டிப்பதே பாஜகவின் திட்டமாகும். இதனைத் தான் ஆர்எஸ்எஸ் அமைப்பும் வெகுகாலமாகச் செய்துவருகிறது.

இடஒதுக்கீட்டை முடிவுக்குக் கொண்டுவரும் மோடி அரசின் சதித்திட்டத்தை அம்பலப்படுத்தும் நோக்கில் மாவட்டம் தோறும் காங்கிரஸ் கட்சி போராட்டம் மேற்கொள்ளவுள்ளது. இடஒதுக்கீடு விவகாரத்தில் மத்திய சமூகநீதித் துறை அமைச்சர் தாவர்சந்த் கெலாட் நாடாளுமன்றத்தை ஏமாற்றியுள்ளார். நிச்சயம் அவருக்கு எதிராக அவசர தீர்மானம் கொண்டுவரப்படும்" என்றார்.

முன்னதாக, உத்தரகாண்ட் மாநில இடஒதுக்கீட்டு வழக்கில் ஞாயிற்றுக்கிழமை மாநில அரசுப் பணிகளில் எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு இடஒதுக்கீடு வழங்குவது கட்டாயமில்லை என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இதுதொடர்பாக நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த மத்திய சமூகநீதித்துறை அமைச்சர் தாவர்சந்த் கெலாட், உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கும் மத்திய அரசுக்கும் எந்த சம்பந்தமும் இல்லையெனவும் இடஒதுக்கீடு வழங்குவதில் மத்திய அரசு உறுதியாக உள்ளதெனவும் விளக்கமளித்தார்.

இதையும் படிங்க : இந்தியர்கள் பங்கேற்கும் விண்வெளி பயிற்சி ரஷ்யாவில் தொடக்கம்!

Last Updated : Feb 11, 2020, 3:13 PM IST

ABOUT THE AUTHOR

...view details