தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் ராஜஸ்தான் மாநிலம் முழுவதும் வெள்ளம் சூழ்ந்துள்ளது. அதிலும் குறிப்பாக கோடா, ஜல்வார், புண்டி, தோல்பூர் உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்து வருகிறது. வீடுகள், சாலைகள் முற்றிலும் சேதமாகியுள்ளன. தாழ்வான பகுதியில் இருப்பவர்களை பாதுகாப்பான இடங்களுக்கு குடிபெயர்த்துள்ளனர். வெள்ளத்தில் சிக்கியவர்களை தேசிய பேரிடர் மீட்புக்குழு, ராணுவத்தினர் தனி குழுவாக பிரிந்து மீட்டு வருகின்றனர்.
இதையடுத்து மத்திய பிரதேசத்தில் உள்ள அணைகள் நிரம்பி தண்ணீர் வெளியேறுவதால் கோடா, ஜல்வாரை சுற்றியுள்ள பகுதிகளில் நிலைமை மோசமாகவுள்ளது. இது தொடர்பாக மத்திய பிரதேச முதலமைச்சர் கமல் நாத்திடம் தொடர்பு கொண்டு நிலைமை குறித்து அலுவலர்களை ஆய்வு செய்ய அனுப்புமாறு கோரிக்கை வைத்துள்ளார் அசோக் கெலாட்.