தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

அப்ரிடிக்குப் பதிலடி கொடுத்த கவுதம் கம்பீர்! - பாஜக எம்பி கம்பீர்

இந்தியா குறித்தும், பிரதமர் மோடி குறித்தும் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த பாகிஸ்தான் முன்னாள் வீரர் அப்ரிடிக்கு பாஜக எம்பி கவுதம் கம்பீர் பதிலடி கொடுத்துள்ளார்.

gautam-gambhir-attacks-former-pak-cricketer-afridi-for-derogatory-comments-against-pm-modi
gautam-gambhir-attacks-former-pak-cricketer-afridi-for-derogatory-comments-against-pm-modi

By

Published : May 18, 2020, 10:28 AM IST

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அப்ரிடி, இந்தியா குறித்தும், காஷ்மீர் குறித்தும் அவ்வப்போது சில நேரங்களில் பேசும் விஷயங்கள் சர்ச்சையை ஏற்படுத்தும். தற்போது அப்ரிடி மீண்டும் ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளார். சமீபத்தில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிக்குச் சென்ற அவர், "உலகமே கரோனா வைரஸ் பாதிப்பால் மோசமாகியுள்ளது. ஆனால் அதைவிட மோடியின் மனமும், இதயமும் மோசமானது" எனப் பேசி வீடியோ வெளியிட்டார்.

இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய அணியின் முன்னாள் வீரரும், பாஜக எம்பியுமான கவுதம் கம்பீர் கருத்து தெரிவித்துள்ளார்.

அதில், ''சிலர் வயதில் முதிர்ச்சியடைந்தாலும், மனதளவில் முதிர்ச்சியடையவில்லை. 20 கோடி மக்கள் இருக்கும் நாட்டில் 7 கோடி பேர் ராணுவத்தில் இருப்பதாகச் சொல்கிறார் அப்ரிடி. அப்படி இருந்தும் 70 ஆண்டுகளாக காஷ்மீருக்காகக் கெஞ்சிக்கொண்டிருக்கிறார்கள்.

பாகிஸ்தான் மக்களை ஏமாற்றுவதற்காக அப்ரிடி, இம்ரான் கான், பாஜ்வா போன்ற ஜோக்கர்கள் இந்தியா மீதும், பிரதமர் மோடி மீதும் வெறுப்பை உமிழ்கிறார்கள். ஆனால் கடைசி வரை காஷ்மீர் உங்களுக்குக் கிடைக்காது. வங்கதேசம் ஞாபகம் இருக்கிறதா?

உலகமே கரோனா வைரசிற்கு எதிராகப் போராடி வரும் சூழலில், உங்களின் கருத்துக்கள் உங்கள் நாட்டின் எண்ணத்தை வெளிப்படையாகக் காட்டுகிறது. இந்த நேரத்திலும் எங்கள் நாட்டிற்குப் பயங்கரவாதிகளை அனுப்பி வருகிறீர்கள். இதுதான் உங்களின் எண்ணம் என்றால் நீங்கள் தேசத்தின் அடிப்படையில் மனரீதியாகவோ மனிதனாகவோ வளர முடியாது'' எனப் பதிவிட்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து இந்திய அணியின் முன்னாள் வீரர்களான ஹர்பஜன் சிங், யுவராஜ் சிங் ஆகியோரும் அப்ரிடிக்குக் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க:அரவிந்த் கெஜ்ரிவால் வழங்கிய ரேஷன் கூப்பனை வாங்க மறுத்த கம்பீர்

ABOUT THE AUTHOR

...view details