ஈரான் தலைநகர் தெஹ்ரானின் வடக்கில் தஹ்ரிஸ் பஸார் பகுதி உள்ளது. இந்தப் பகுதியில், சினா அட் ஹர் மருத்துவ கிளினீக் அமைந்துள்ளது.
இங்கு வாயு கசிந்து தீ விபத்து ஏற்பட்டு, வெடித்து சிதறி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 15 பெண்கள் உள்பட 19 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்து தொடர்பான காணொலி காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகிவருகின்றன.
இது குறித்து தெஹ்ரான் துணை ஆளுநர் ஹமித்ரேஸா கௌதார்ஸி கூறுகையில், “மருத்துவ கிளீனிக்கில் கியாஸ் கசிந்து தீ விபத்து நடந்துள்ளது. அதன் பின்னர் அப்பகுதியில் வெடித்து சிதறி கட்டடம் முழுவதும் தீ பற்றி எரிந்துள்ளது.
ஈரான் வாயு கசிந்து தீ பற்றி எரிந்ததில் 19 பேர் உடல் கருகி உயிரிழப்பு! முதல்கட்டமாக பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்றும் முயற்சியில் இறங்கியுள்ளோம்” என்றார்.
தெஹ்ரான் தீயணைப்பு படை செய்தித் தொடர்பாளர் ஜலால் மலேகி கூறும்போது, “தீ விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் சம்பவ பகுதிக்கு விரைந்துசென்று தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டோர்.
முதல்கட்டமாக 13 பேர் உயிரிழந்திருந்தது தெரியவந்திருந்தது. இதுவரை 20 பேர் மீட்கப்பட்டுள்ளனர். அப்பகுதியை முழுவதுமாக கட்டுப்பாட்டுக்குள் எடுத்து சாலையை அடைத்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டுவருகிறோம்” என்றார்.
இதையும் படிங்க: கராச்சி பயங்கரவாத தாக்குதலுக்கு இந்தியாதான் காரணம்' - இம்ரான் கான் குற்றச்சாட்டு