தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

‘பாலியல் சீண்டலுக்கு உள்ளானோம்’ - கல்லூரி மாணவிகள் கதறல் - கல்லூரி மாணவிகள் கதறல்

டெல்லி: கார்கி கல்லூரி நிகழ்ச்சியின்போது வெளி ஆட்களால், மாணவிகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டதாக கல்லூரி மாணவிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

Gargi
Gargi

By

Published : Feb 10, 2020, 6:54 PM IST

கார்கி மகளிர் கல்லூரி டெல்லியில் செயல்பட்டு வருகிறது. 50 ஆண்டுகளைக் கடந்து செயல்பட்டு வரும் இந்தக் கல்லூரியின் ஆண்டு விழா கடந்த சில தினங்களுக்கு முன்பு நடைபெற்றது. இந்த நிகழ்வின் போது கல்லூரிக்குள் மது போதையில் நுழைந்த சிலர் மாணவிகளை பாலியல் துன்புறுத்தலுக்குளாக்கியதாகக் கூறப்படுகிறது.

இதுதொடர்பாக மாணவிகள் காவல்துறையிடம் புகார் அளித்துள்ளனர். பாலியல் சீண்டலுக்கு உள்ளானதாக மாணவிகள் புகாரில் தெரிவித்துள்ளனர். கடந்த 6ஆம் தேதி இரவில் நடைபெற்ற கல்லூரி விழாவில் ஏராளமான மாணவிகள் மானபங்கப்படுத்தப்பட்டதாக சமூக ஊடகங்கள் வாயிலாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் மாணவிகளிடமிருந்து எழுத்துப் பூர்வமான புகார் வரவில்லை என்று காவல் துறையினர் கூறுகின்றனர். கல்லூரி வளாகத்தில் இருந்த கண்காணிப்பு கேமராக்களை கைப்பற்றியும் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இதுகுறித்து ஜனநாயக மாணவர் கூட்டமைப்பு சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டது. அதில், கல்லூரி வளாகத்திற்குள் வெளியாட்கள் நுழைந்ததற்கு காரணம் நிர்வாகத்தின் பாதுகாப்பு குளறுபடிகளே என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: 'இது தொடர்ந்தால், முதலீடு வராது' எச்சரிக்கும் ப.சிதம்பரம்

ABOUT THE AUTHOR

...view details