உலகின் மூலமுடுக்கில் எங்கு திரும்பினாலும் நெகிழி ஆட்கொண்டுள்ளது. இது போதாது என்று காலையில் எழுந்துவுடன் பல் துலக்க உதவும் டூத்பிரஷ் முதல் இரவு தூங்கப் போகும் வரை நாம் பெரும்பாலும் நெகிழியைத் தான் பயன்படுத்தி வருகிறோம். இப்படி நெகிழியின் பயன்பாடு நம்மை ஆட்கொண்டு விட்டாலும், இந்த நெகிழியின் அதிகரிப்பு உலகில் உள்ள அனைத்து உயிரினங்களின் வாழ்வுக்கும் பெரும் அச்சுறுத்தலைக் கொடுத்து வருகிறது.
இங்கு நெகிழியை கொடுத்து பசியாறலாம்! - எங்கே?
ராய்ப்பூர்: நெகிழிகளை அகற்ற சத்தீஸ்கர் மாநில அரசு ஒரு நூதன திட்டத்தை கையில் எடுத்துள்ளது.
இதனால் நெகிழியின் பயன்பாட்டைக் குறைக்க உலக நாடுகள் பல முக்கிய திட்டங்களையும், சட்டங்களை நிறைவேற்றி வருகின்றன. குறிப்பாக தற்போது தமிழ்நாட்டில் இந்தாண்டு தொடக்கம் முதல் 14 வகையான நெகிழிப் பொருட்களுக்கு அரசு தடை விதித்துள்ளது.
அந்த வரிசையில் சத்தீஸ்கர் மாநிலம் ஒரு அருமையான, வித்தியாசமான திட்டத்தை கையில் எடுத்துள்ளது. அது என்னவென்றால் கார்பேஜ் கஃபே எனும் அரசு உணவு விடுதியில் ஒரு கிலோ நெகிழியை கொடுத்து ஒரு வேளைக்கான சாப்பாட்டையும், அரை கிலோ நெகிழி கொடுத்து சிற்றுண்டியையும் உண்ணலாம் எனத் தெரிவித்துள்ளது. இந்த திட்டம் ரூ. 5 லட்சம் மதிப்பில் கடந்த வாரம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் பொதுமக்கள் மத்தியில் தற்போது நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.