தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

காரில் கடத்திய 195 கிலோ கஞ்சா பறிமுதல்; ஓட்டுநர் கைது! - kanja seized

ஹைதராபாத்: விசாகப்பட்டினத்தில் இருந்து காரில் கடத்திக் கொண்டு வரப்பட்ட 195 கிலோ கஞ்சாவினை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

காரில் கடத்தி வரப்பட்ட  கஞ்சா பறிமுதல்

By

Published : Jul 21, 2019, 9:45 PM IST

ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தில் கஞ்சா பொருட்கள் கடத்தப்படுவதாக பல நாட்களாகவே குற்றச்சாட்டு எழுப்பப்பட்டு வந்தது. குறிப்பாக, கார் மூலம் கஞ்சா பொருட்கள் கடத்தப்பட்டு வருவதாக காவல்துறையினருக்கு தொடர்ந்து புகார் வந்த வண்ணம் இருந்தது. இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் விசாகப்பட்டினம் முழுவதும் தொடர்ந்து வாகனச் சோதனையில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில், இன்று விசாகப்பட்டினம் அருகே கஞ்சா கடத்தப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் வந்தது. இதனையடுத்து, அப்பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, அவ்வழியாக வந்த காரை நிறுத்தி விசாரணை நடத்தினர். அப்போது காரில் சோதனையிட்டபோது 195 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது. இதையடுத்து கார் ஓட்டுநரை கைது செய்தனர். மேலும் 195 கிலோ கஞ்சா, கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட காரையும் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details