அநீதிக்கு எதிராக ரத்தம் சிந்தாமல் யுத்தம் நடத்துவதற்காக, சத்தியாகிரகம் என்ற புதுமையான யுக்தியை மகாத்மா காந்தி கண்டுபிடித்தார். காந்தி நடத்திய அகிம்சை வழி போராட்டமானது இந்திய விடுதலைக்கு முக்கிய பங்காற்றியது. சத்தியாகிரக போராட்டம் வழியாக கிடைத்த தன்னம்பிக்கையில் ஒட்டுமொத்த இந்தியர்களும், நாட்டின் மீது ஆதிக்கம் செலுத்திய ஆங்கிலேயர்களைப் பார்த்து வெள்ளையனே வெளியேறு என்று குரல் கொடுத்தனர்.
ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக இந்தியாவில் பல புரட்சிகளும் கலகங்களும் முன்னெடுக்கப்பட்டன. 1857ஆம் ஆண்டு நடத்தப்பட்ட சிப்பாய் கலகமானது சிறிது நாட்களிலேயே ஆங்கிலேய ராணுவத்தால் ஒடுக்கப்பட்டது. மேலும், முகலாயப் பேரரசின் கடைசி மன்னரான பகதூர் ஷா சாபர் கைதுசெய்யப்பட்டு நாடு கடத்தப்பட்டார். அதன் பின்னரும், குர்திராம் போஸ் போன்ற தனிப்புரட்சியாளர்களும் உருவெடுத்தனர். இருப்பினும், வெகுஜன மக்கள் அவர்கள் பின்னர் நிற்க முன்வரவில்லை.
தென்னாப்பிரிக்காவில் அகிம்சை போராட்டத்தை வெற்றிகரமாக நடத்திக் காட்டி, 1915ஆம் ஆண்டு இந்தியா திரும்பிய காந்தி கோடிக்கணக்கான இந்திய மக்களை ஆயுதமின்றி போராட பயிற்றுவித்தார். 1917ஆம் ஆண்டு பீகார் மாநிலம் சம்பரன் கிராமத்தில் விவசாயிகளுக்கு ஆதரவாக தனது முதல் இந்திய சத்தியாகிரகப் போராட்டத்தை நடத்தினார் காந்தி.
தென்னாப்பிரிக்காவின் கருப்பினத் தலைவர் நெல்சன் மண்டேலா துப்பாக்கி, வெடிகுண்டுகளே ஆயுதமாகப் பார்க்கப்பட்ட நிலையில், காந்தியின் வருகைக்குப்பின் பொதுமக்களின் ஆயுதமாக அகிம்சை மாறியது. கிலாபத் இயக்கத்தின் மூலம் இஸ்லாமியர்கள் பலரும் காந்தியின் அகிம்சை வழிப்போராட்டத்தில் பங்கேற்கத் தொடங்கினர். 1857ஆம் ஆண்டு சிப்பாய்க் கலகத்திற்குப்பின் இந்து இஸ்லாமிய ஒற்றுமைக்கு கிலாபத் இயக்கம் காரணமாக அமைந்தது. சத்தியாகிரகப் போராட்டமானது முன்னெப்போதுமில்லாத வகையில், பெண்களை பொதுத்தளத்திற்கு வெகுவாக அழைத்து வந்தது எனலாம். குறிப்பாக சத்தியாகிரகப் போராட்டத்தில் கைதான முதல் பெண் காந்தியின் மனைவி கஸ்தூரி பாய் காந்தியே. ஒழுக்கமானது சத்தியாகிரகப் போராட்டத்திற்கு பெரிதும் அவசியம் எனக் கருதிய காந்தி இளைஞர்களை நெறிமுறைப்படுத்துவதற்கு யங் இந்தியா, ஹரிஜன், நவஜீவன் போன்ற பத்தரிகைகளில் தொடர் கட்டுரைகளை எழுதினார். அவரின் குஜராத் வித்யா பீடம் என்ற பல்கலைக்கழகம் சத்தியாகிரகப் போராட்டத்தின் பயிற்சிப் பட்டறையாக மாறியது. பின்னாளில் நடைபெற்ற உப்பு சத்தியாகிரகம் உள்ளிட்ட முக்கியமான சத்தியாகிரகப் போராட்டத்தில் குஜாரத் வித்யாபீடம் மையப்புள்ளியாகத் திகழ்ந்தது. எதிரணியில் உள்ள ஆங்கிலேயர்களே சத்தியாகிரகப் போராட்டத்தில் ஈடுபடத் தொடங்கியது இதில் குறிப்பிடத்தக்க அம்சமாகும். காந்தியின் அரசியல் பங்களிப்பு இந்தியாவைத் தாண்டி உலகளவில் பரவத்தொடங்கியது. தென்னாப்பிரிக்கவின் கருப்பின நாயகன் நெல்சன் மண்டேலா, அமெரிக்க கருப்பினத்தவரின் உரிமைக் குரலான மார்டின் லூதர் கிங் உள்ளிட்டோர் காந்தியின் சத்தியாகிரத்தால் ஈர்க்கப்பட்டு அதை பின்பற்றி வெற்றி கண்டார்கள். அமெரிக்க கருப்பினர்தவரின் உரிமைக்குரல் மார்டின் லூதர்கிங் எளிமையான வாழ்க்கை, இயற்கை மற்றும் சுற்றுச்சூழலுடன் இயைந்த வாழ்க்கை, அனைத்து சமூகங்களுடனும் இணைந்த கூட்டு வாழ்க்கை, வறியோரின் முன்னேற்றம், பெண்களின் வளர்ச்சி இவையே சத்தியாகிரக அகிம்சைப் போராட்டத்தின் கருதுகோளாகத் திகழ்ந்தது. முதலாளித்துவம், பொதுவுடைமை என இரு துருவங்களாக உலகம் பிரிந்திருந்த நிலையில் காந்தியின் கிராம சுயாட்சி தன்னிறைவு சமூகத்தை முன்னிறுத்தியது. பொதுவுடைமை கருத்தியலின் ஆயுதப்புரட்சியாளர்களான மா சே துங், ஃபிடல் கேஸ்ட்ரோவுக்கு லெனின் வழிகாட்டியாக இருந்ததுபோல, மார்டின் லூதர் கிங், நெல்சன் மண்டேலா போன்ற அகிம்சைப் புரட்சியாளர்களுக்கு காந்தி வழிகாட்டியாக இருந்தார்.