காந்தியடிகளின் 150ஆம் பிறந்த நாளை தேசமே கோலாகலமாகக் கொண்டாடத் தயாராகி வருகிறது. காந்தியடிகளின் பிறந்த நாளுக்காக அவருக்கு மிகவும் பிடித்த "வைஷ்ணவ் ஜன தோ" என்ற பாடலை இந்தியாவின் தலைசிறந்த பாடகர்களைக் கொண்டு உருவாக்கியது நமது ஈடிவி பாரத்.
ஈடிவி பாரத் சிறப்புப் பாடலை பகிர்ந்தார் மத்திய அமைச்சர் பியூஸ் கோயல்! - Piyush Goyal retweet
காந்தியடிகளின் 150ஆவது பிறந்த நாளை முன்னிட்டு ஈடிவி பாரத் வெளியிட்டுள்ள சிறப்புப் பாடலை மத்திய அமைச்சர் பியூஸ் கோயல், தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
Piyush Goyal retweet
இந்த இனிய பாடலை நமது ஈடிவி பாரத்தின் தலைவரும் இந்தியாவின் மிக முக்கிய நபர்களில் ஒருவருமான ராமோஜி ராவ் தற்போது வெளியிட்டுள்ளார். இப்போது, இந்தப் பாடலை மத்திய ரயில்வே துறை அமைச்சர் பியூஸ் கோயல் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
மேலும் அவர், "ஈடிவி பாரத் மூலமாக நாட்டின் தலைசிறந்த பாடகர்கள், தேசத்தந்தை மகாத்மா காந்திக்கு இசை மூலம் அஞ்சலி செலுத்தியுள்ளனர்" என்று ட்வீட் செய்துள்ளார்.