தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ராகுல் காந்தி குறித்து விமர்சனம் - விஜய் ரூபானி கண்டனம்! - IncomeTaxDepartment

அகமதாபாத்: காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை பப்பி நாய் என்று கூறிய குஜராத் மாநில பாஜக அமைச்சர் கணபதி வசவாவிற்கு, விஜய் ரூபானி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்

விஜய் ரூபாணி

By

Published : Apr 21, 2019, 9:06 AM IST

மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. முதற்கட்டமாக 20 மாநிலங்களிலும், இரண்டாம் கட்டமாக 13 மாநிலங்களிலும் தேர்தல் நடைபெற்று முடிந்த நிலையில், மூன்றாம் கட்டத் தேர்தல் குஜராத் உள்ளிட்ட 13 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் நாளை மறுநாள் நடைபெறுகிறது.

இந்நிலையில் குஜராத் மாநில பாஜக அமைச்சர் கணபதி வசவா, டேடியபாடா பகுதியில் நேற்று தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், " பிரதமர் மோடி எழுந்து நின்றால் குஜராத் சிங்கமே எழுந்து நிற்பது போல் தோன்றுகிறது. ஆனால் ராகுல் காந்தி எழுந்து நின்றால் பப்பி நாய் தனது வாலை ஆட்டுவது போல் தோன்றுகிறது" என கடுமையாக விமர்சித்தார்.

இதற்கு குஜராத் மாநில முதலமைச்சர் விஜய் ரூபானி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மேலும் தேர்தல் காலங்களில் இது போன்ற தனிநபர் விமர்சனங்கள் தவிர்க்கப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details