ஆந்திர மாநிலம் அமராவதியில் உள்ள தனியார் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற தொழில்நுட்பக் கருத்தரங்கு நிகழ்ச்சியில் இஸ்ரோ முன்னாள் தலைவர் கிரண் குமார் பங்கேற்றார். விழாவில் பேசிய கிரண் குமார் இந்திய விண்வெளித்துறையின் வளர்ச்சி குறித்து முக்கிய கருத்துகளைக் கல்லூரி மாணவர்களுடன் பகிர்ந்து கொண்டார்.
உலக அளவிலான அறிவியல் துறைகளை ஒப்பிடும்போது இந்தியா விண்வெளித்துறை சிறப்பான முன்னேற்றத்தைக் கண்டுள்ளதாகத் தெரிவித்த அவர், ’இதுவரை இஸ்ரோ 299 செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்தியுள்ளதாகப் பெருமிதத்துடன் தெரிவித்தார்.
கல்லூரி விழாவில் இஸ்ரோ முன்னாள் கிரண் குமார் நிலவுக்கு மனிதனை அனுப்பும் கனவுத் திட்டமான ககன்யான் திட்டம் வரும் 75ஆவது சுதந்திர தினத்துக்குள் நிறைவேற்றப்படும் என்றும், இந்திய விண்வெளித்துறை வளர்ச்சியில் விக்ரம் சாராபாயின் பங்களிப்பு குறித்தும் மாணவர்களுக்கு எடுத்துரைத்தார்.
விழாவில் பேசிய சென்னை ஐ.ஐ.டியின் பேராசிரியர் பிரதீப், 'இன்றைய உலகில் நீர் மேலாண்மையின் தேவை குறித்து விவரித்துப் பேசினார். விழாவில் முடிவில் சிறப்பாகச் செயல்பட்ட மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.
இதையும் பாருங்க: ஹாலிவுட் படங்களைவிட குறைந்த பட்ஜெட், சாதனை புரிந்த சந்திரயான்-2 திட்டம்!