தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

'வருங்காலத்தில் கோவிட்-19 தோல்வி குறித்த ஆய்வுகளை ஹார்வர்டு மேற்கொள்ளும்' - ராகுல் காந்தி - கோவிட்-19 ஐ கையாளுவதில் தோல்வி

டெல்லி: பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி, கோவிட்-19 ஆகியவற்றில் மத்திய அரசு அடைந்த தோல்விகள் குறித்து ஹார்வர்டு பல்கலைக்கழகத்தின் வருங்காலங்க ஆய்வுகள் இருக்கும் என ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

Harvard case studies  failure to tackle COVID-19  demonetisation  GST  Rahul Gandhi  ராகுல் காந்தி  ஹார்வர்டு  ஜிஎஸ்டி தோல்வி  பணமதிப்பிழப்பு தோல்வி  கோவிட்-19 ஐ கையாளுவதில் தோல்வி  ஹார்வர்டு ஆய்வுகள்
'பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி தோல்விகள் குறித்த ஆய்வுகளை ஹார்வர்டு மேற்கொள்ளும்'

By

Published : Jul 6, 2020, 11:43 AM IST

கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 24 ஆயிரத்து 850 பேருக்குக் கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. மேலும், உலகில் கரோனா தொற்று அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் ரஷ்யாவை முந்தி 3ஆவது இடத்திற்கு இந்தியா சென்றுள்ளது. இதுதொடர்பாக ட்வீட் செய்துள்ள ராகுல் காந்தி, மத்திய அரசு கரோனாவைக் கையாளுவதில் தோல்வியடைந்துள்ளதாக விமர்சித்திருக்கிறார்.

அதில், வருங்காலங்களில் ஹார்வேர்டு பல்கலைக்கழகத்தின் வர்த்தகக் குழு ஆய்வுகள், கோவிட்-19 கையாளுதல், பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி ஆகியவற்றைச் செயல்படுத்தியதில் மோடி அரசு அடைந்த தோல்விகள் குறித்து இருக்கும் எனக் குறிப்பிட்டுள்ளார். அதனுடன் பிரதமர் மோடி பேசும் வீடியோ ஒன்றையும் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

அந்த வீடியோவில், ”மகாபாரதப் போரை முடிக்க 18 நாள்கள் தேவைப்பட்டன. அதேபோல, இந்தக் கரோனாவை ஒழிக்க 21 நாள்கள் போதும்” என பிரதமர் பேசுவது உள்ளது. மத்திய அரசு கரோனாவைக் கையாளுவதில் தோல்வியடைந்ததை உணர்த்த கரோனா பாதித்தோரின் எண்ணிக்கை உயர்ந்ததை விளக்கும் வரைபடமும் அந்த வீடியோவில் இணைக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:பேசும் படங்கள்... வீரர்களை நலம் விசாரித்த மோடி - மன்மோகன் சிங்கை ஒப்பிட்ட ப. சிதம்பரம்

ABOUT THE AUTHOR

...view details